வெள்ளிச்சந்தை அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

பாலக்கோடு: பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பாலக்கோடு அருகே வெள்ளிசந்தையில் மிக பழைமைவாய்ந்த ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உபயதார்கள் மூலமாக 1008 செம்பு கலச தீர்த்தக்குடங்கள் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்டு, 4ம் யாகசாலை பூஜை நடந்தது.

பின்னர் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு, 60 அடி உயரத்தில் உள்ள கோயில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இவ்விழாவில் வெள்ளிசந்தை, காவேரிப்பட்டினம், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மல்லுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாரண்டஅள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: