பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)

காம் ச த்ருஷ்ட்வா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ ப்ரதக்ஷிணம்

ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்தத்வீபா வஸுந்தரா
Advertising
Advertising

ஸர்வகாமதுகே தேவி ஸர்வதீர்த்தாபிஷேசினீ

பாவனே ஸுரபிஸ்ரேஷ்டே தேவிதுப்யம் நமோஸ்துதே

கோமாதா ஸ்லோகம்

பொதுப் பொருள்:

தெய்வப் பிறவியான பசுவை வணங்கி, அதனை வலம் வந்து துதித்தால் ஏழு தீவுகளுடன் கூடிய பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டுகிறது. நற்குணங்கள் நிரம்பிய, அமுதம் போன்ற பாலை நல்கும் பசுவை வழிபட்டால் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். இந்த வழிபாடு அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத் தரவல்லது. நம்மைப் பரிசுத்தம் செய்யக்கூடியவள் இந்த கோமாதா. கேட்டதையெல்லாம் தரும் காமதேனுவாகிய கோமாதாவே தங்களை வணங்குகிறேன்.

(பசுவை தேவர்கள், எல்லை தெய்வங்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் போன்றோர் அனுதினமும் பூஜிப்பதாகக் கூறப்படுகிறது. கோமாதாவாகிய பசுவை வெள்ளிக்கிழமைகளில் பூஜித்து இத்துதியை சொல்லி வர தீராத நோய்களும் தீரும். சகல பாவங்களும் சட்டென விலகும் என வேதங்கள் கூறுகின்றன.)

Related Stories: