இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூன் 30, சனி  

அஹோபிலமடம் ஸ்ரீமத் 13வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஜூலை 1, ஞாயிறு  

சங்கடஹர சதுர்த்தி. திருவோண விரதம். சென்னை சுகர் ஆஸ்ரம சுகப்பிரம்ம மகரிஷி மகாஜெயந்தி. காஞ்சி வரதர் ஜேஷ்டாபிஷேகம். கோயம்பேடு சக்கர ஸ்நானம். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேரோட்டம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சந்நதி எதிரில் ஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

ஜூலை 2, திங்கள்  

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் ஸப்தாவரணம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ஜூலை 3, செவ்வாய்  

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். சோழவந்தான் ஜனக மாரியம்மன் ரதோற்சவம்.

ஜூலை 4, புதன்  

சோழவந்தான் ஜனக மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா. ஊஞ்சல் உற்சவ சேவை,  விவேகானந்தர் நினைவு நாள்.

ஜூலை 5, வியாழன்  

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேலுடன் தரிசனம்.

ஜூலை 6, வெள்ளி  

ஏயர்கோன் கலிக்காமர். ராமேஸ்வரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. தேவகோட்டை ரங்கநாதர் பவனி. திருவிடைமருதூர் பிரஹத்குஜாம்பிகை புறப்பாடு.

Related Stories: