காரைக்கால் அம்மையார் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையார் கோயிலில், இன்று (26ம்) காலை புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும், திருக்கல்யாண நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார், காரைக்கால் பாரதியார் வீதியில் தனி கோயில் கொண்டுள்ளார். புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் காரைக்கால் அம்மையார் இல்லத்திற்கு, பிச்சாண்டவர் கோலத்தில் சென்று, பகல் உணவு வழங்குமாறு கேட்பார். அப்போது, தயிர் சாதம் எனும் அமுதுடன் தன் கணவர் பரமதத்தர் தனது இல்லத்திற்கு அனுப்பி வைத்த இரு மாங்கனிகளில் ஒன்றை அம்மையார் பிச்சாண்டவரை உண்ண வைப்பார். அதனை பிச்சாண்டவர் மகிழ்வுடன் உண்டு அம்மையாரை வாழ்த்தி செல்வார்.

தொடர்ந்து, இல்லத்திற்கு வரும் கணவர் பரமதத்தருக்கு, மதிய உணவுடன் 2ம் மாங்கனியை அம்மையார் வைப்பார். அம்மாங்கனியை உண்ட பரமதத்தர், மிகவும் ருசியாக இருப்பதாகவும், எனவே, தான் அனுப்பிய 2 மாங்கனிகளில் மற்றொன்றையும் வைக்குமாறு கேட்க, செய்வதறியாது திகைக்கும் அம்மையார், வேறு அறைக்கு சென்று சிவபெருமானை வேண்டுவார். அப்போது மற்றொரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கைகளில் விழும். அதை கணவர் பரமதத்தருக்கு அம்மையார் உண்ண வைப்பார். அதை உண்ணும் பரமதத்தர் இது முன்னினும் அதிகமான சுவையாக உள்ளது. இது நான் கொடுத்தனுப்பிய மாங்கனி இல்லை. இது ஏது? உண்மையை உரைப்பாய் என  அம்மையாரிடம் பரமதர் கேட்கும்போது, அம்மையார் நடந்த உண்மைகளை உரைப்பார். இதை நம்பாத பரமதர், அப்படியெனில் எங்கே மற்றொரு மாங்கனியை இறைவனிடம் வேண்டி வரவழைத்து காட்டு என்பார். கணவர் முன்னால், மீண்டும் அம்மையார் சிவபெருமானை வேண்ட, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கைகளில் விழும். இதை பார்க்கும் பரமதர், நீ மனிதப்பிறவி அல்ல.

தெய்யவப்பிறவி உன்னுடன் இனி வாழ்ந்தால் அது தெய்வகுற்றமாகும். என அம்மையாரை விட்டு பிரிந்து பாண்டிய நாடு சென்று 2ம் திருமணம் செய்துகொள்வார். இதனை அறிந்து அம்மையார் பரமதத்தரை சென்று பார்க்கும் போது, பரமதர் தனது 2ம் மனைவி மற்றும் குழந்தையுடன் அம்மையார் காலில் விழுவார். இதை ஏற்றுகொள்ளாத அம்மையார், சிவபெருமானிடம் வேண்டி பேய் உருவம் வாங்கி, சிவபெருமானை கயிலாய மலையில் கைகளால் நடந்து சென்று வணங்குவார். அப்போது சிவபெருமான் ‘அம்மையே வருக’ என அழைத்து அவர் வேண்டிய வரத்தை வழங்குவார். காரைக்கால் அம்மையாரின் இந்த வரலாற்று நிகழ்ச்சியை மையமாக கொண்டு, காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித்திருவிழா ஒரு மாதம் நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டு மாங்கனித்திருவிழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (26ம் தேதி) காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து, இரவு 10 மணிக்கு, காரைக்கால் அம்மையாரும், பரமதத்த செட்டியாருகும் முத்துச் சிவிகையில் திருவீதியுலா வரும் நிகழ்சி நடைபெறவுள்ளது. திருவிழாவின் மூன்றாம் நாள் முக்கிய நிகழ்சியாக, நாளை (27ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு ஸ்ரீ பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேக தீபாராதனையும், காலை 7.00 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு, வீட்டு வாசல், மாடி கூறைகளில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவரை எதிர் கொண்டு அழைத்து சென்று அமுதுபடையல் படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இரவு 9 மணிக்கு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பரமதத்தருக்கு 2ம் திருமணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Related Stories: