×

லோக்கல் சரக்கு விமர்சனம்

சினிமா துணை நடிகையான உபாசனா, 25 ஆயிரம் பணமும், தாலியும் கிடைக்கும் என்பதற்காக கூட்டு திருமணம் ஒன்றில் தினேஷை (டான்ஸ் மாஸ்டர்) சும்மானாச்சுக்கும் திருமணம் செய்கிறார். சில வருடங்களுக்கு பிறகு அவரை மீண்டும் சந்திக்கும்போது அவர் பெரும் குடிகாரனாக இருக்கிறார். அவரை திருத்தி நல்லவனாக மாற்ற நினைக்கும் அவர் மீண்டும் நிஜமாகவே அவரை திருமணம் செய்து கொள்கிறார். 24 மணி நேரமும் குடித்து திரியும் தினேஷை அவர் எப்படி திருத்தினார் என்பதுதான் படத்தின் கதை.

‘குடி குடியை கெடுக்கும்’ என்கிற மெசேஜை இரண்டு மணி நேர படமாக தந்திருக்கிறார். இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். படம் முழுக்க குடி கும்மாளம், பாரில் நடக்கும் கூத்துகள் இவற்றை காமெடி தோரணாமாக தொங்கவிட்டு கடைசி 15 நிமிடம் ஒரு சிறிய கதை சொல்கிறார். பெரும் குடிகாரன் என்று தெரிந்தும் அழகும், துணிச்சலுமிக்க உபாசனா, தினேஷை திருமணம் செய்து கொள்வதற்கான வலுவான காரணம் இல்லை. என்றாலும் மதுவுக்கு அடிமையானவர் குடும்பம் படும் துன்பங்களை காட்சிப்படுத்திய விதத்தில் கவனம் பெறுகிறது படம்.

தினேசின் நண்பனாக வரும் யோகி பாபு, இமான் அண்ணாச்சி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார்கள். சாம்ஸ் செய்யும் ஹீரோ அலப்பரை கூடுதலாக சிரிக்க வைக்கிறது. கதையின் நாயகன் தினேஷ் எல்லா காட்சியிலும் ஒரே முகபாவனையோடு வருகிறார். சுவாமிநாதன் ராஜேசின் இசை படத்திற்கு பலம். கே.எஸ்.பழனியின் ஒளிப்பதிவு சுமார் ரகம். சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிற படத்தை இன்னும் நேர்த்தியாக தந்திருக்கலாம்.

The post லோக்கல் சரக்கு விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Upasana ,Dinesh ,Summanach ,Dali ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED புழல் சிறையில் கைதிகளை சந்திக்க...