பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் சீதா திருக்கல்யாண உற்சவம்

பொன்னமராவதி: பொன்னமராவதி தேவி பூமாதேவி சமேத அழகப்பெருமாள் கோயிலில் சீதா திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் கோயிலில் நான்கு கால பூஜையுடன் விழா துவங்கி காலை 6 மணி முதல் பொன்னமராவதி சோழிஸ்வரர் கோயிலிலிருந்து உஞ்ச விர்த்தி சீர்வரிசையுடன் கோயிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவம் தீபாராதனை நடந்தது. திருக்கல்யாணத்தை நாராயண பட்டர் நடத்தி வைத்தார். மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: