×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனி மாத தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசாமி  கோயில் ஆனி மாத தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயம். இங்கு ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் துவக்கமாக கொடியேற்று நிகழ்ச்சி நேற்று  காலை நடைபெற்றது. ராஜகோபால சுவாமி சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தில் கருடன் சின்னத்துடன் கூடிய கொடியை கோயிலில் பூஜை செய்து தீட்சிதர்கள் ஏற்றினார்கள்.

அப்போது ராஜகோபால சுவாமி கொடிமரத்தின் முன்பு கல்யாண அவசர திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவினை முன்னிட்டு தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். அதில் முக்கியத்துவம் வாய்ந்ததான கருடசேவை வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது. 28ம் தேதி இரவு தமிழகத்தில் மிகப்பெரிய கோயில் குளமொன 22 ஏக்கர் பரப்பளவுள்ள ஹரித்திராநதி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?