×

மிஷன் சாப்டர் 1 மூலம் திருப்புமுனை: ஸ்டன்ட் சில்வா நெகிழ்ச்சி

சென்னை: அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 படம் மூலம் பெரும் பெயர் கிடைத்திருப்பதாக ஸ்டன்ட் சில்வா நெகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் கூறியது: மங்காத்தா, அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட படங்கள் மூலம் கிடைத்த பெயரை போல், தற்போது பொங்கலுக்கு வெளியான மிஷன் சாப்டர் 1 படத்துக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. ஹாலிவுட் பாணியில் இதன் சண்டைக் காட்சிகள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டும்போது, நிஜமாக அது எனக்கு பெரும் திருப்புமுனை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வப்போது, எனது சினிமா கேரியர் இதுபோன்ற படங்களால் திருப்புமுனையாக மாறியுள்ளதை மறக்க மாட்டேன்.

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளி வந்து ஆக்‌ஷனில் மிக பெரிய வெற்றி அடைந்த ‘எமதொங்கா’ படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் 300 படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுவிட்டேன். சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளதும் சந்தோஷம். இப்போது ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்க உள்ளேன். இது பற்றி விவரங்கள் விரைவில் தெரிவிப்பேன்.

 

The post மிஷன் சாப்டர் 1 மூலம் திருப்புமுனை: ஸ்டன்ட் சில்வா நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Stunt ,Silva ,Arun Vijay ,Pongal… ,Leschi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...