வேதாரண்யம் அன்னப்ப சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் நகரம் நாகை சாலையில் அமைந்துள்ளது பூரணபுஷ்பகலா சமேத அன்னப்ப சுவாமி கோயில். இந்த கோயிலில் ஆனி மாத உற்சவம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளை முன்னிட்டு புனித நீர் கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்பு கலசங்கள் மேள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமியின் திருக்கல்யாணமும் ஊஞ்சல் உற்சவமும் பின்பு வேதாரண்யம் கோயில் ஆதின வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது. சுவாமியின் திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் அடங்கிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சென்னையை சேர்ந்த லெஷ்மி நாராயணன், குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: