×

ரூ.2 கோடி எலக்ட்ரிக் கார் வாங்கிய விஜய்

சென்னை: ரூ.2 கோடி மதிப்பில் எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார் நடிகர் விஜய். ஏற்கனவே சில விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிய மாடல் பி.எம்.டபிள்யூ கார் வாங்கி இருப்பதாகவும் இந்த காரின் மதிப்பு 2 கோடிக்கு மேல் என்றும் கூறப்படுகிறது. தளபதி விஜய் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மினி கூப்பர் எஸ், ஆடி ஏ8 உள்பட சில வெளிநாட்டு கார்கள் வைத்திருக்கிறார். கார்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் விஜய். தற்போது புதிய BMW i7 xDrive 60 என்ற எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். விஜய் வாங்கிய காரின் புகைப்படம் வெளியாகவில்லை. ஆனால் இந்த மாடல்தான் அந்த கார் எனக்கூறி, அவரது ரசிகர்கள் காரின் புகைப்படத்தை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதுவரை எலக்ட்ரிக் காரை எந்த தமிழ் நடிகரும் பயன்படுத்தவில்லை. முதல்முறையாக விலை உயர்ந்த எலக்ட்ரிக் காரை வாங்கியிருப்பது விஜய்தான். மேலும் இனி படப்பிடிப்புகளுக்கு இந்த காரில்தான் அவர் செல்ல முடிவு செய்துள்ளாராம். சென்னை புறநகரில் நடந்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்புக்கும் இந்த காரில்தான் விஜய் செல்கிறாராம்.

The post ரூ.2 கோடி எலக்ட்ரிக் கார் வாங்கிய விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Chennai ,BMW ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...