இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூன் 16, சனி  

Advertising
Advertising

ரம்பா திருதியை. ரம்ஜான் பண்டிகை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை, பத்ராசல ராமர் புறப்பாடு.

ஜூன் 17, ஞாயிறு  

சதுர்த்தி விரதம். கதலீ கெளரி விரதம். மெலட்டூர் விநாயகர், தேரழுந்தூர் ஞானசம்பந்தர், திருமயம் சத்யமூர்த்தி பெருமாள் புறப்பாடு.

ஜூன் 18, திங்கள்  

மாணிக்கவாசகர். அஹோபிலமடம் 45ம் பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.சோழவந்தான் ஜனக மாரியம்மன் உற்சவாரம்பம். கானாடுகாத்தான், திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

ஜூன் 19, செவ்வாய்  

சஷ்டி விரதம். அமர்நீதியார். திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவாரம்பம். சுவாமி தங்கப் பூங்கோயிலிலும் அம்பாள் சப்பரத்திலும் பவனி. ஆரண்ய கெளரி விரதம். திருமலை சின்னஜீயர் ஸ்வாமி திருநட்சத்திரம்.சோழ வந்தான் ஜனக மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

ஜூன் 20, புதன்  

ஆனி, உத்திர தரிசனம். சிதம்பரம் சிவபெருமான் திருத்தேர். பின்னிரவு நடராஜர் அபிஷேகம், சோழவந்தான் ஜனக மாரியம்மன் யாளி வாகனத்தில் புறப்பாடு. கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு.

ஜூன் 21, வியாழன்  

சூரிய உதயத்திற்கு முன் ஆனி உத்திர தரிசனம். சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் உற்ஸவாரம்பம். சிதம்பரம் நடராஜர் ஆனித்திருமஞ்சனம்.

ஜூன் 22, வெள்ளி  

மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் ஆண்டவன் தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல். மகாசுதர்சன ஜெயந்தி. காஞ்சி வரதர் கருட சேவை. மதுராந்தகம் கோதண்டராமஸ்வாமி உற்சவம். திருநெல்வேலி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் இரவு சுவாமி அம்பாள் இருவரும் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பவனி.

Related Stories: