பலன் தரும் ஸ்லோகம் : (கல்வி, கலைகளில் சிறக்க...)

ஸரஸ்வத்யா: ஸூக்தீரம்ருதலஹரீ கௌஸலஹரீ

பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவணகலுகாப்யாமவிரளம்
Advertising
Advertising

சமத்காரஸ்லாகாசலிதஸிரஸ: குண்டலகண:

ஜணத்காரைஸ்தாரை: பிரதிவசனமாசஷ்ட இவ தே:

ஆதிசங்கரரின் ஸௌந்தர்யலஹரி.

பொதுப் பொருள்:

அம்பிகையே, பரமேஸ்வரன் பத்தினியே, நமஸ்காரம். அமிர்த வெள்ளம் பொங்கிப் பெருகுவது போன்ற இனிய சொற்களைப் பேசுபவளே, அந்த உன் பேச்சை

சரஸ்வதிதேவியும் தன் காதுகளால் பருகிக் களிக்கிறாள். அந்த உன் பேச்சை ஆமோதிக்கும் வகையில் அவள் தலையசைக்கும்போதெல்லாம் காது

குண்டலங்களும் அசைந்து சேர்ந்திசைக்கும். அன்னையே உன் வாக்கைக் கேட்டு சரஸ்வதியும் மகிழ்கிறாள் என்றால், சாதாரண பாமரர் எத்தகைய பேறு பெற்றவராவர்! ஏன், பேச்சுத் திறனற்றவரும் பேச்சாற்றல் பெறுவரே! கல்வியில் சிறப்பும், உயர் தேர்ச்சியும், கலைகளில் உன்னதமும் பெற அருளும் அம்பிகையே உனக்கு நமஸ்காரம்.

(பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தினத்தன்று மாணவ, மாணவியர்கள் இந்த ஸ்லோகத்தை படித்தால் கல்வியில் சிறப்புத் தகுதிகளை பெற்று வாழ்வில் சிறக்கலாம்.)

Related Stories: