முத்துப்பேட்டை இடும்பாவனம் சத்குணநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சத்குணநாத கோவிலில் அமைந்துள்ளது. 6ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் இறைவன் குருமா முனிவருக்கு காட்சி கொடுத்த தலமாககருதப்படுகிறது. இந்த கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கோயிலில் கடந்த 28ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குன்னியூர் பண்ணை மண்டகப்படிதாரர்கள் சார்பில் திருக்கல்யாண வைபவம் வெகுசிறப்பாக நடைப்பெற்றது. இதில் அம்மன் கழுத்தில் சுவாமியின் சார்பில் குருக்கள் திருமாங்கல்யம் அணிவித்தார். இதில் அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: