ஆம்பூர் அருகே பிரமோற்சவத்தையொட்டி பெருமாள் திருக்கல்யாணம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வடசேரி சென்ன கேசவபெருமாள் கோயிலில் நேற்று பிரமோற்சவத்தையொட்டி பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆம்பூர் அடுத்த வடசேரியில் செங்கமல வல்லி தாயார் உடனுறை சென்னகேசவபெருமாள் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சிம்ம, கருட, அனுமந்த, நாக வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினார்.   

4ம் நாளான நேற்று பெருமாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பிந்து மாதவ பெருமாள் கோயிலில் நடந்து வரும் வைகாசி பிரமோற்சவத்தில் 4ம் நாளான நேற்று பெருமாள் கருட வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு பிந்துமாதவ பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Related Stories: