கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்  நேற்று நடைபெற்றது. கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் (24ம்தேதி) இரவு அம்பாள் தவக்கோலம், சிவபெருமான் காட்சியளித்தல் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணிக்கு மாலைமாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து 12 மணிக்கு மங்கலாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண  உற்சவம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு திருமண மறைசடங்கு நிகழ்ச்சியும், சாமி வீதியுலாவும் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 28ம் தேதி வரை ஊஞ்சல் வைபவமும், 29ம் தேதி பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. வரும் 30ம் தேதி மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: