×

ஆதித்தபுரம் ஊசிகாட்டு சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழா

நாகர்கோவில்:  வெள்ளமடம் ஆதித்தபுரம் இந்து நாடார் சமுதாய ஊசிகாட்டு சுடலை மாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கொடை விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 26ம் தேதி வரை விழா நடக்கிறது. நேற்று மாலை 4 மணிக்கு கும்பாபிஷேகம், இரவில் தீபாராதனை, அன்னதானம், கரகாட்டம், மகுட ஆட்டம், குடியழைப்பு, அலங்கார தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று(25ம் தேதி) காலை 6 மணிக்கு நையாண்டி மேளம், 8 மணிக்கு சிங்காரி மேளம், 12 மணிக்கு முத்தாரம்மன் கோயிலில் இருந்து சுவாமிக்கு சுருள் எடுத்து வருதல், 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு தாரை தப்பட்டை மேளம், 8 மணிக்கு கரகாட்டம், 9.30 மணிக்கு மகுடாட்டம், 12. மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சுவாமி ஊர் சுற்றி வருதல், அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு அன்னம் படைத்தல், 3.30 மணிக்கு கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை காலை 6 மணிக்கு வழிபடுதல், 12 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடு களை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி