×

வில்லுக்குறி கிணற்றடிவிளை சிவசுடலையாடும் பெருமாள் கோயில் கொடைவிழா

நாகர்கோவில்: வில்லுக்குறி கிணற்றடிவிளை, இந்துநாடார் சமுதாய சிவசுடலையாடும் பெருமாள் கோயில் கொடைவிழா நடைபெற்று வருகிறது. வில்லுக்குறி கிணற்றடிவிளை, இந்துநாடார் சமுதாய சிவசுடலையாடும் பெருமாள் கோயில் கொடைவிழா கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இரண்டாம் நாள் வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
நேற்று (24ம் தேதி) சிங்காரி மேளம், பூஜையும் தீபாராதனையும், நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது.

இன்று (25ம் தேதி) நான்காம் நாள் காலை 8 மணிக்கு வில்லிசை,  பகல் 12 மணிக்கு வாதை சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும், இரவு 12.30க்கு சிவசுடலையாடும் பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திக்கு சிறப்பு பூஜை ஆகியன நடக்கிறது. நாளை (26ம் தேதி) காலை 5 மணிக்கு சாலசுவாமிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும், 8 மணிக்கு நையாண்டி மேளம், 10 மணி ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாட்டினை ஊர்தலைவர் சந்திரசேகரன் மற்றும் விழா கமிட்டியினர், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி