பள்ளிகொண்டா அடுத்த தோளப்பள்ளி கிராமத்தில் திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

பள்ளிகெண்டா: பள்ளிகொண்டா அடுத்த தோளப்பள்ளி கிராமத்தில் திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆம்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட தோளப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாள் கிராம தேவதைக்கு சிறப்பு அபிஷேக,  ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கூழ்வார்த்தலும், இரவு காளியம்மனுக்கு கண் திறப்பு விழாவும் நடைபெற்றது.2ம் நாளான நேற்று ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது. சிரசு கோயில் வந்து சேர்ந்ததும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு  கால்நடைகளை காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு  சுமார் ஆயிரம் கிலோ கறியை பக்தர்களுக்கு விருந்து அளித்தனர். இந்த விருந்து விடிய விடிய நடைபெற்றது. இரவு சிரசு உடை களைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

× RELATED சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில்...