பலாப்பழ பாயசம்

என்னென்ன தேவை?

பொடித்த பலாப்பழம் - 1 கப், வெல்லத்தூள் - 1/2 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், பால் - 4 கப், ஏலக்காய்த்தூள், உப்பு - தலா 1 சிட்டிகை, உடைத்த  முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 15, கெட்டியான தேங்காய் பால் - 1 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பல் பல்லாக நறுக்கி வறுத்த  தேங்காய்த்துண்டுகள் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்து வேகவைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து  தனியே வைத்து, பின் பொடித்த பலாப்பழத்தை சேர்த்து வதக்கி இறக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க  வைத்து இறக்கி வடிகட்டவும். பாலை கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி, அது பாதியாக வந்ததும் பாசிப்பருப்பு சேர்த்து கைவிடாமல் கிளறி,  வெல்லப்பாகு, பலாப்பழம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க வைத்து பாயசம் பதம் வந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். பின் முந்திரி,  காய்ந்த திராட்சை, வறுத்த தேங்காய் சேர்த்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.

× RELATED சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில்...