×

அரியக்குடி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து வரும் 28ம் தேதி வரை அம்சவாகனம், சிம்ம வாகனம், வெள்ளி அனுமார், கருட வாகனம், வெள்ளி சேஷம், யானை வாகனம், மஞ்சம், குதிரை வாகனம் ஆகியவற்றில் சுவாமி, அம்மன் வீதி உலா நடக்கவுள்ளது. 26ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. 29ம் தேதி தேரோட்டமும், 30ம் தேதி கோ ரதம், 31ம் தேதி வெள்ளி ரதம், 1ம் தேதி தெப்பம், 2ம் தேதி புஷ்ப பல்லாக்கு, 3ம் தேதி மரக்குதிரை, 4ம் தேதி பல்லக்கு நடக்கிறது.

Tags :
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?