×

முருகம்பள்ளம் கிராமத்தில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே முருகம்பள்ளம் கிராமத்தில் நடந்த திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரவுபதி  அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கொடியேற்றமானது, கடந்த 4ம் தேதி விநாயகர் பூஜை, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் தொடங்கியது. தினமும் மாலை 3 மணி முதல் மாலை 6  மணி வரை 18 நாட்கள் மகாபாரத சொற்பொழிவும், 6ம் தேதி முதல் 13 நாட்கள் இரவு 9  மணிக்கு தெருக்கூத்து நாடகங்களும் நடத்தப்பட்டு வந்தது.

இதன் தொடர்ச்சியாக 17வது நாளான நேற்று காலை 10 மணிக்கு கோயில் வளாகத்தில்  துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனன், பீமன் சண்டையிடுவதும், அதில்  துரியோதனன் இறப்பது போலும் நாடக குழுவினர் நடித்து காண்பித்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு நடந்த பூமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அக்னி குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். நிகழ்ச்சியை காண முருகம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி,  ஜேடுகொத்தூர், மாதனகுப்பம், மேல்அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக வந்திருந்தனர்.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!