பரமத்திவேலூரில் அம்மையப்பர் அருட்காட்சி பெருவிழா

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் செட்டியார் தெரு திருஞானசம்பந்தர் மடத்தில், மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அர்ப்பணி அறக்கட்டளை 5ம் ஆண்டையொட்டி அம்மையப்பர் மற்றும் 63 நாயன்மார்கள் அருட்காட்சி பெருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 6 மணிக்கு சக்தி விநாயகர் வழிபாடு, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சள் காப்பு, பசுந்தாயார் வழிபாடும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு மற்றும் சிவபாலர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

× RELATED சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில்...