நீங்கள் ஆசிரியர் ஆக முடியுமா?

லக்னத்திற்கு 10ம் இடம் ஜீவன ஸ்தானம். இந்த ஸ்தானத்திற்கு சூரியன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் பார்வை சம்பந்தம் பெற்றாலும் பத்தாம் வீட்டில் இருந்தாலும் ஆசிரியர் ஆகலாம்.

Advertising
Advertising

இரண்டாம் அதிபதி பலமாக இருந்து, சந்திரன் யோகமாக அமைந்து குரு, புதன் சம்பந்தப்பட்டால் விரிவுரையாளர் ஆகும் யோகம் உண்டு.

சூரியன் சந்திரன் சேர்ந்தால் அமாவாசை யோகம். இந்த அமைப்பு ஒருவரை சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சொற்பொழிவாளர், கவிஞர், கல்லூரிப் பேராசிரியராக மிளிர வைக்கும்.

லக்னம் 4, 7, 10ல் புதன் இருந்து லக்னாதிபதியின் சம்பந்தம் ஏற்பட்டால் கணக்கு ஆசிரியராகலாம்.

திரிகோண ஸ்தானங்கள் எனும் 1, 5, 9 ஆகிய இடங்களில் சுக்கிரன், குரு, புதன் சம்பந்தப்பட்டால் மொழி ஆசிரியராகலாம். தமிழில் பாண்டித்யம் உண்டாகும். வரைகலை, ஓவியம், அனிமேஷன் மூலம் புகழ் கிடைக்கும்.

லக்னம் மற்றும் 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களுக்கு சனியின் பார்வை, சேர்க்கை சம்பந்தம் ஏற்பட்டால் பள்ளி, கல்லூரியில் அல்லது புத்தக ஆசிரியராகவும், பதிப்பக வெளியீட்டாளராகவும் இருப்பார்கள்.

செவ்வாய் அல்லது சந்திரன் புதனுடன் சேர்க்கை பெற்றால் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணி புரியலாம். இரண்டாம் அதிபதி பலமாக இருந்து குரு ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், வர்கோத்தமம் அடைந்தால் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் என வர முடியும்.

பத்தாம் இடத்திற்கும், குருவிற்கும், இரண்டாம் அதிபதிக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் ஏற்பட்டால்தான் ஆசிரியராக பணி புரிய முடியும். இல்லையென்றால் படித்த படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.

Related Stories: