×

ரூட் நம்பர்:17

 

அமைச்சர் ஹரீஷ் பெராடியின் மகன் அகில் பிரபாகர், தனது காதலி அஞ்சுவுடன் தென்காசி அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு காரில் பயணிக்கிறார். விடுமுறையைக் கழிக்க அன்றிரவு அவர்கள் நடுக்காட்டில் தங்குகின்றனர். அப்போது திடீரென்று அவர்களை சிறைபிடிக்கும் காட்டுவாசி ஜித்தன் ரமேஷ், பிறகு அங்குள்ள பாதாள குகையில் அவர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார். அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது, அகில் பிரபாகர் அநியாயமாக கொல்லப்படுகிறார். தனியாகப் பரிதவிக்கும் அஞ்சு, மீண்டும் தப்பிக்க முயற்சித்து ஜித்தன் ரமேஷால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார். இந்நிலையில், காணாமல் போன அவர்களைக் கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் டாக்டர் அமர் ராமச்சந்திரனும், போலீஸ் கான்ஸ்டபிள் அருவி மதனும் காட்டுக்கு வருகின்றனர். அப்போது, காட்டில் இதுபோலவே சில மர்ம மரணங்கள் நடந்துள்ளது தெரியவருகிறது. ஜித்தன் ரமேஷ் யார்? அவருக்கும், கொல்லப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் போலீசார் யாரைக் காப்பாற்றினார்கள் என்பது மீதி கதை.

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதை கொண்ட இதில் சைக்கோ வில்லனாக வரும் ஜித்தன் ரமேஷ், அதிகமாக வசனம் பேசாமல், பாடிலாங்குவேஜிலேயே நடித்து மிரட்டியுள்ளார். அவரது பிளாஷ்பேக் உருக வைக்கிறது. இளம் காதல் ஜோடி அகில் பிரபாகரும், அஞ்சுவும் நெருக்கமான காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளனர். பாதாள குகைக்குள் சிக்கித்தவிக்கும் அஞ்சு, படம் முழுக்க கடுமையாக உழைத்து நடித்துள்ளார். கொடூர குணம் கொண்ட அமைச்சர் ஹரீஷ் பெராடி, இன்ஸ்பெக்டர் அமர் ராமச்சந்திரன், கான்ஸ்டபிள் அருவி மதன் உள்பட பலர், அந்தந்த கேரக்டருக்கு நியாயம் செய்து நடித்துள்ளனர். காட்டுப் பகுதி, பாதாள குகை, காதல் ஜோடியின் தவிப்பு, சைக்கோவின் வெறியாட்டம் என்று, அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ைஸ முற்பகுதி வரை ெகாண்டு சென்ற இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன், திகில் காட்சிகளுக்கு இன்னும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். பிற்பகுதி காட்சிகளை யூகித்துவிட முடிகிறது. ஆர்ட் டைரக்டர் பேபோர் முரளி பாதாள குகையை உருவாக்கிய விதமும், காட்சிகளை ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம் நேர்த்தியாகப் படமாக்கிய விதமும், இசை அமைப்பாளர் அவுசேப்பச்சனின் பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம். ஜாக்கி ஜான்சனின் சண்டைக் காட்சிகள் மிரட்டல் ரகம். ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரூட் கிளியர்தான்.

The post ரூட் நம்பர்:17 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Route Number ,Akhil Prabhakar ,minister ,Harish Beradi ,Anju ,Tenkasi ,Jitan Ramesh ,Route No:17 ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...