விளையாட்டில் யோகம் யாருக்கு?

ஒருவர் ஏதாவது ஒரு விளையாட்டில் சிறந்து விளங்கவும், அதன் மூலம் உத்யோகம், புகழ், பணம், செல்வாக்கு கிடைக்கவும் ஜாதக கட்டத்தில் சில கிரகங்களின் அமைப்பும், அருளும் தேவை. விளையாட்டுகளில், தடகள போட்டிகளில் பயிற்சியும், திறனும், திறமையும் பெற்ற பிறகு அதில் முன்னிலையும், வெற்றியையும் தருவதற்கு காலச்சக்கரம் என்ற யோக தசாபலன்கள் அமைய வேண்டும். பொதுவாக எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரக சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை, ஆட்சி, உச்சம் போன்ற அமைப்புகள் மூலமாகத்தான் ஒருவர் அந்த துறையில் பிரகாசிக்க முடியும். விளையாட்டு என்றால் முதலில் புத்தி சாதுர்யம் மிகவும் முக்கியம். அதை நமக்கு அருள்வது புதன், புதன் ஜாதகத்தில் பலமாக இருப்பது அவசியம். அடுத்தது மனதை ஆளுகின்ற மனோகாரகன் என்றழைக்கப்படும் சந்திரனின் அருள் தேவை.

Advertising
Advertising

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், நீச்சல், குத்துச்சண்டை, ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம், கார் ரேஸ், கேரம், சதுரங்கம் என பல வகையான விளையாட்டுக்கள் உள்ளன. புதன்  சந்திரன்  சுக்கிரன்  செவ்வாய்  சனி ஆகிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெறும்போது அந்த விளையாட்டில் வெற்றிக் கொடி நாட்டுவார்கள். கேரம், செஸ் போன்றவற்றில் தேர்ச்சி பெற புதனும், சுக்கிரனும் மற்றும் சந்திரனும் காரணமாகிறார்கள். இதற்கு மூளைத் திறனும், மன திடமும், விரல்களின் ஜாலமும் தேவை. டென்னிஸ், டேபிள் டென்னிஸுக்கு சுக்கிரன், புதன் சேர்க்கை அவசியம். உடல் பலத்தை காட்டக்கூடிய நீச்சல், ரேஸ் போன்றவைகளுக்கு செவ்வாய்  சனி சம்பந்தம் தேவை.

Related Stories: