×

குட்நைட் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்

சென்னை: சிவகார்த்திகேயன் கடைசியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார். தனது 21வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘குட்நைட்’ படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பட வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

The post குட்நைட் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sivakarthikeyan ,Chennai ,Rajkumar Periyasamy ,Kashmir ,Sai Pallavi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிப்புக்கு முழுக்கா? டாக்டர் ஆகிவிட்டாரா அதிதி ஷங்கர்?