×

காளிதாஸ் எனக்கு நடிப்பு கற்றுக்கொடுத்தார்: நமீதா பிரமோத்

சென்னை: நவரசா பிலிம்ஸ் சார்பில் கே.எஸ்.ஜித், பிளெஸ்ஸி ஜித் இணைந்து தயாரித்துள்ள படம், ‘அவள் பெயர் ரஜ்னி’. வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், எஸ்.அஸ்வின் குமார், ரமேஷ்கண்ணா நடித்துள்ளனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, 4 மியூசிக்ஸ் இசை அமைத்துள்ளது. வின்சென்ட் வடக்கன், டேவிட் கே.ராஜன் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். அபிஜித் எஸ்.நாயர் இணை தயாரிப்பு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அப்போது நமீதா பிரமோத் பேசுகையில், ‘எனது முதல் பை-லிங்குவல் படமான இது தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாவது குறித்து மிகவும் மகிழ்ச்சி. காளிதாஸ் மிகச்சிறந்த கோ-ஸ்டார். நடிப்பு சம்பந்தமாக எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார்’ என்றார்.

காளிதாஸ் ஜெயராம் பேசும்போது, ‘விஜய் சொன்ன, ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற டயலாக் ஞாபகத்துக்கு வருகிறது. இதே இடத்தில் கமல் சார் என் கையைப் பிடித்து, 10 வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர், ‘விக்ரம்’ என்ற படத்தைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் வந்து இப்படத்தை மிகப்பெரிய படமாக மாற்றியுள்ளார். இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில், மிகவும் வித்தியாசமான மேனரிசங்களை வெளிப்படுத்தி நடித்துள்ளேன். திரில்லர் கதைகளில் இது புதுவிதமாக இருக்கும்’ என்றார்.

 

The post காளிதாஸ் எனக்கு நடிப்பு கற்றுக்கொடுத்தார்: நமீதா பிரமோத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kalidas ,Namitha Pramod ,Chennai ,KS jith ,Blessy jith ,Navarasa Films ,Vinil Skaria Varghese ,Kalidas Jayaram ,Nameeta Pramod ,S. Ashwin Kumar ,Ramesh Khanna ,RR Vishnu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மதுரையில் வீட்டில் இருந்த பொருட்கள்...