- கியாரா
- ஹைதெராபாத்
- ராம் சரண்
- கியாரா அத்வானி
- ஷங்கர்
- அஞ்சலி
- எஸ்.ஜே. சூர்யா
- சுனில்
- Samuthirakani
- டாமன்
- தில் ராஜு
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
ஐதராபாத்: ராம் சரண், கியரா அத்வானி நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். ஷங்கர் இயக்கி வருகிறார். இதில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி, திடீரென இணையதளத்தில் கசிந்தது. இதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ந்நிலையில் இதுதொடர்பாக ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் தில் ராஜு தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. திருட்டுத்தனமாக படத்தின் பாடல் காட்சியை லீக் செய்த நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க புகார் மனுவில் கோரப்பட்டது. இதையடுத்து எப்ஐஆர் பதியப்பட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பிட்ட பாடல் காட்சிக்காக மட்டும் ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடல் காட்சி, நியூசிலாந்தில் 8 நாட்கள் படமாக்கியுள்ளனர். படக்குழுவை சேர்ந்த ஒருவர்தான் இந்த பாடல் காட்சியை லீக் செய்திருப்பதாக கேம் சேஞ்சர் குழுவினர் கூறுகின்றனர்.
The post ராம் சரண் – கியரா பட பாடல் லீக்: போலீசில் புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.