×

கண்ணப்பா படத்தில் சிவனாக பிரபாஸ், பார்வதியாக நயன்தாரா

ஐதராபாத்: சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ‘இறைவன்’ படம் வெளியாக உள்ளது. இதையடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘கண்ணப்பா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தி கதையில் உருவாக இருக்கும் இப்படத்தில் சிவன் வேடத்தில் பிரபாசும் பார்வதி வேடத்தில் நயன்தாராவும் நடிக்க இருக்கிறார்கள். பான் இந்தியா கதையில் உருவாகும் இந்த படத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உடன் பிரபாஸ் இணைந்து நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படத்தில் பிரபாஸ் நடிப்பார் என கூறப்படுகிறது.

The post கண்ணப்பா படத்தில் சிவனாக பிரபாஸ், பார்வதியாக நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas ,Shiva ,Nayanthara ,Parvati ,Hyderabad ,Shah Rukh Khan ,Jayam Ravi ,Prabhas' ,Shivan ,Parvathy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அனுஷ்காவின் சவாலை ஏற்றார் பிரபாஸ்