×

மனைவி தயாரிப்பில் பாபி சிம்ஹா நடிக்கும் தடை உடை

சென்னை: பாபி சிம்ஹா நடித்துள்ள ‘தடை உடை’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. மதுராஸ் பிலிம் பேக்டரி சார்பில் பாபி சிம்ஹா மனைவியும், நடிகையுமான ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். ராகேஷ்.என்.எஸ் இயக்கியுள்ளார். இவர் நலன் குமாரசாமி, எம்.சரவணன், மணி செய்யோன் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். காந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். பாபி சிம்ஹா ஜோடியாக மிஷா ரங் நடிக்கிறார். மற்றும் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தானபாரதி, செல் முருகன், சரத் ரவி, தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா நடித்துள்ளனர். நடன இயக்குனரும், ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தை இயக்கியவருமான பாபா பாஸ்கர், முதல்முறையாக ஒரு முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சாய்ராம் விஷ்வா கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.

The post மனைவி தயாரிப்பில் பாபி சிம்ஹா நடிக்கும் தடை உடை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bobby Simha ,Ban Dress ,CHENNAI ,Reshmi Menon ,Maduras Film Factory ,Rakesh N.S. ,Nalan Coomaraswamy ,M. Saravanan ,Mani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கொடைக்கானலில் ஓட்டல் அதிபருக்கு கொலை...