ஆக.9ல் வெளியாகிறது குஷி டிரைலர்

‘குஷி’ படத்தின் டிரைலர் ஆக.9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘குஷி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ‘குஷி’ படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை விஜய் தேவரகொண்டா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ‘குஷி’ படத்தின் டிரைலர் ஆக.9ம் தேதி வெளியாகிறது. டிரைலர் 2 நிமிடம் 41 வினாடிகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

The post ஆக.9ல் வெளியாகிறது குஷி டிரைலர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: