×

பிரெஞ்சு நடிகை மரணம்

பாரிஸ்: பேஷன் நட்சத்திரமும், நடிகையும் பிரபல பிரெஞ்சு பாடகியுமான ஜேன் பிர்கின் காலமானார். லண்டனில் பிறந்தவர் ஜேன் பிர்கின் (76), கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஜேன் பிர்கின், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு துறை மட்டுமின்றி பிரான்சில் தனது அரசியல் செயல்பாடு, அம்னஸ்டி இன்டர்நேஷனல், மியான்மரின் ஜனநாயக சார்பு இயக்கம், எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு போன்ற சர்வதேச விழிப்புணர்வு அமைப்புகளில் தூதராகவும் செயல்பட்டு வந்தார். அதேபோல் உலகளவிலான பேரிடர்கள் ஏற்படும்போது, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்தார். அதனை சர்வதேச அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் பாராட்டியும், அவரது மறைவுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

The post பிரெஞ்சு நடிகை மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Paris ,Jane Birkin ,London ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக்...