×

கோடிகள் கேட்கும் மிருணாள் தாக்கூர்

பாலிவுட் முன்னணி நடிகை மிருணாள் தாக்கூர், ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடித்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வரவேற்பு பெற்றது. சமீபத்தில் மிருணாள் தாக்கூர் நடிப்பில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப்தொடர் வெளியானது. இதில் அவர் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். இந்தியில் அவர் ஓரளவு பிசியாக இருந்தாலும் கூட, தென்னிந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தெலுங்கில் நானியின் 30வது படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார், இந்நிலையில், தென்னிந்திய படங்களில் நடிக்க தனது சம்பளத்ைத பல மடங்கு உயர்த்திவிட்டார்.

ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான சம்பளம் பெற்று வந்த மிருணாள் தாக்கூர், தற்போது தனது சம்பளத்தை 3 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஒரு தமிழ்ப் படத்துக்கும், தெலுங்கில் நானி மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிப்பதற்கும் 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நேரடி தமிழ்ப் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய பலர் தயங்குகின்றனர்.

The post கோடிகள் கேட்கும் மிருணாள் தாக்கூர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mrinal Thakur ,Bollywood ,Dulquer Salmaan ,Rashmika Mandana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலுங்கானாவில் உள்ள கோயிலில் பிரபல...