தற்போது அவர் இயக்கும் திரைப்படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை. இதில் வசந்த் ரவி, மெஹ்ரின் பிர்சாடா, ‘விஸ்வாசம்’ அனிகா சுரேந்திரன், ‘புஷ்பா’ சுனில், நடன இயக்குனர் கல்யாண் நடிக்கின்றனர். ஜெ.எஸ்.எம் புரொடக்ஷன்ஸ் ஏ.ஆர்.ஜாபர் சாதிக், எம்பரர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கின்றனர். ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ ஆகிய படங்களில் மாறுபட்ட கேரக்டரில் தனது திறமையை நிரூபித்த வசந்த் ரவி, இப்படத்தில் வித்தியாசமான கேரக்டர் ஏற்றுள்ளார். பிரபாகரன் ராகவன் ஒளிப்பதிவு செய்ய, ‘சொப்பன சுந்தரி’ அஜ்மல் தசீன் இசை அமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற இயக்குனரும், நடிகருமான அமீர் படக்குழுவினர் மற்றும் வசந்த் ரவியை வாழ்த்தினார்.
The post வசந்த் ரவி படத்தில் மெஹ்ரின் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.