கமல் தயாரிக்கும் படத்தில் ஜான்வி கபூர்: பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகிறார்

சென்னை: இளம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் 2019ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆனார். முதல் படமே பெரும் ஹிட் அடிக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியான லவ் டுடே படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உச்சத்தில் உயர்ந்தது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

இந்நிலையில் கமல்ஹாசனின் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். முன்னதாக இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்றும் தேவி மகள் ஜான்வி கபூரை நடிக்க கேட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போனி கபூரிடம் கமல்ஹாசன் பேசி வருகிறாராம்.

The post கமல் தயாரிக்கும் படத்தில் ஜான்வி கபூர்: பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: