ஹீரோ – டைரக்டர் இவங்களா?.. தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து விக்னேஷ் சிவன், புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இப்படம் தொடர்பான மற்றுமொரு ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. அதாவது பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுதியாகும் பட்சத்தில் நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் ஜோடியின் மகளான ஜான்வி கபூர், இப்படம் மூலம் தான் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post ஹீரோ – டைரக்டர் இவங்களா?.. தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: