×

ஹீரோவாகும் நடன இயக்குனர்

தமிழ், கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் அதிவேக நடனக்காட்சிகள் அமைத்தவர், ஜானி. தற்போது அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘ரன்னர்’. விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், ஜி.பனிந்திரா, எம்.ஹரி தயாரிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய் சவுத்ரி இயக்குகிறார். காவல்துறை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் தந்தை, மகன் பாசம் குறித்து சொல்லப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹீரோ ஒருபுறம் காக்கி சீருடையும், மறுபுறம் கதரும் அணிந்துள்ளார்.

விஜய் சவுத்ரி கூறுகையில், ‘படத்தில் தந்தை, மகனுக்கு இடையிலான சென்டிமெண்ட் காட்சிகள் நிச்சயமாக ரசிகர்களை உலுக்கும். திரில்லர் ஜானரில் உருவாகிறது. மணிசர்மா இசையும், ஜானியின் நடனமும் ஹைலைட்டாக இருக்கும்’ என்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங், வரும் 20ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. பி.ஜி.விந்தா ஒளிப்பதிவு செய்கிறார்.

The post ஹீரோவாகும் நடன இயக்குனர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Johnny ,Vijay Baskar ,Vijay Damuruga ,Arts ,G. Panindra ,M. Hari ,Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு...