3 ஹீரோயின்களுடன் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி

சென்னை: ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு, ‘ஜீனி’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார். இயக்குநர் அர்ஜுனன் ஜெஆர். இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஜீனி’. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜெ. குமார் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை சர்வதேச சண்டை பயிற்சி கலைஞரான யானிக் பென் அமைக்க, ஸ்வப்னா ரெட்டி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

The post 3 ஹீரோயின்களுடன் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: