23 மணி நேரத்தில் உருவான தமிழ் படம்

சென்னை: இதற்கு முன்பு 8 குறும்படங்கள் இயக்கியுள்ள சுகன் குமார், நடன இயக்குனர் கலாவிடம் 6 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றினார். பிறகு ‘உளவுத்துறை’, ‘ஜனனம்’, ‘கலவரம்’ ஆகிய படங்களின் இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்தார். அவர் இயக்குனராக அறிமுகமாகும் ‘பிதா’ என்ற படம் 23 மணி, 23 நிமிடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள படம், ‘கலைஞர் நகர்’. இப்படத்தின் ஷூட்டிங் 23 மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. அதாவது, படக்குழுவினர் திட்டமிட்டபடி 23 மணி நேரத்துக்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்துவிட்டது.22 மணி, 53 நிமிடங்களில் உருவாக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நகர்’ படத்தை சுகன் குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிரஜின் பத்மநாபன், பிரியங்கா, டாலி ஐஸ்வர்யா, கதிர், லிவிங்ஸ்டன், ரவிச்சந்திரன், ரஞ்சித், கே.கே.பிரகாஷ், விஜய் ஆனந்த், பிரபா நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசை அமைத்துள்ளார். பாபா கென்னடி வசனம் எழுதியுள்ளார். சுகன் குமார் கூறுகையில், ‘மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. புதுமையாக யோசித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அதிக ரிஸ்க் எடுத்து 22 மணி, 53 நிமிடங்களில் படத்தை இயக்கி முடித்தேன்’ என்றார்.

The post 23 மணி நேரத்தில் உருவான தமிழ் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: