நாகசைதன்யா ஜோடியானார் கீர்த்தி சுரேஷ்

ஐதராபாத்: நாக சைதன்யா, நடிப்பில் ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் ‘கஸ்டடி’ படம் மூலம் தமிழுக்கும் அவர் அறிமுகமானார். இப்போது, ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ படங்களை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நாக சைதன்யா நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது. படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ‘கார்த்திகேயா 2’ வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்த படத்தையும் பான் இந்தியா முறையில் வெளியிட உள்ளனர். படத்திலிருந்து அனுபமா விலகுவதற்கு, சம்பள பிரச்னை காரணமாக கூறப்படுகிறது. பான் இந்தியா படமாக இது உருவாகுவதால் அனுபமா அதிக சம்பளம் கேட்டாராம். ஆனால் அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு ஏற்பத்தான் சம்பளம் தரப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியிருக்கிறது. இதனால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை விட அதிக சம்பளம் கொடுத்து கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

 

The post நாகசைதன்யா ஜோடியானார் கீர்த்தி சுரேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: