இந்நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் பிராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் 2024 பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே என கமலின் அடுத்தடுத்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாகும் வாய்ப்பு உள்ளது.
இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே என இரண்டு படங்களும் மிகவும் பிரம்மாண்டமான படங்களாக உருவாகி வருகின்றன. தன்னுடைய கேரக்டர்களை இந்தப் படங்களில் கண்டிப்பாக கமல்ஹாசன் சிறப்பாகத்தான் கொடுப்பார். அந்த வகையில் இந்த இரு படங்களும் திட்டமிட்டபடி உருவாகும் பட்சத்தில், ஒரே நாளில் கமலின் இரண்டு படங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும். இந்திய சினிமாவில் சிறப்பான தருணமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
The post ஒரே நாளில் வெளியாகும் 2 கமல் படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.