65 (ஆங்கிலம்) – திரை விமர்சனம்

இது ஒரு அதீத கற்பனையுடன் கூடிய சயின்ஸ்பிக்‌ஷன் கதை. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கதை நடக்கிறது. அப்போது பூமியில் மனிதர்கள் தோன்றவில்லை. டைனோசர்கள் உள்ளிட்ட சில உயிரினங்களே உயிர் வாழ்கின்றன. ஆனால், வேற்றுகிரகங்களில் மனிதர்கள் தோன்றி வாழ்கின்றனர். அவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களின் பூமியில் இருந்து மற்ற கிரகங்களுக்கு ஆராய்ச்சிக்காக செல்கின்றனர். படத்தின் நாயகன் ஆடம் டிரைவர் தனது குழுவினருடன் வேற்றுகிரகத்துக்குச் செல்லும்போது, விண்கலம் பழுதாகி பூமியில் விழுகிறது. குழுவினர் அனைவரும் இறந்துவிடுகின்றனர். பூமியில் தனியாக சிக்கிக்கொண்டு தவிக்கும் அவர், அங்கு ஏரியானா கிரீன் பிளாட் என்ற சிறுமியைக் கண்டுபிடிக்கிறார். அவள் இன்னொரு கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்து மாட்டிக்கொண்டவர்.

இருவரும் பூமியில் இருக்கும் டைனோசர்களை எப்படிச் சமாளித்து தங்கள் கிரகத்துக்குச் செல்கின்றனர் என்பது கதை. கிரகம் விட்டு கிரகம் பயணித்தல், பூமியில் வாழும் கொடூர டைனோசர்கள் என்று, தனித்தனி படத்துக்கான கதையை ஒரே படமாக கொடுத்துள்ளனர் ஸ்காட் பெக், பிரையன் உட்ஸ் ஆகியோர். கதையைப் படிக்கும்போது பிரமாண்டமான காட்சிகள் கற்பனையில் விரியும். ஆனால், படத்தில் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாக முடிகிறது. தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், வெறுமனே இருவரது பயணமாக அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பெரிய தொழில்நுட்ப தரத்தில் இல்லை. பல காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகளாகவே இருக்கிறது. என்றாலும், இரண்டு மணி நேரம் டைம் பாஸ் தரும் படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

The post 65 (ஆங்கிலம்) – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: