×

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘அநீதி’ திரைப்படம் ஜூலை 21ம் தேதி ரிலீஸ்

வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ திரைப்படம் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெயில்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. படத்தின் தலைப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார். படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 21-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘அநீதி’ திரைப்படம் ஜூலை 21ம் தேதி ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arjun Das ,Vasanthapalan ,Tushara ,Arjun Chidambaram ,Vanitha Vijayakumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போர் திரை விமர்சனம்