- எடப்பாடி
- Konganapuram
- ஆடி திருவிழா
- சேலம்
- நாமக்கல்
- ஈரோடு
- தர்மபுரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- ஆந்திரப் பிரதேசம்
- கேரளா
இடைப்பாடி, ஆக.3: கொங்கணாபுரத்தில் நேற்று கூடிய சந்தையில் ஆடி விழாவையொட்டி ஆடு- கோழி விற்பனை களை கட்டியது. ஆக மொத்தம் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 13,500 ஆடுகள், 2,300 பந்தய சேவல் மற்றும் கோழிகள், 1.30 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, கோழிகளை வாங்கிச் சென்றனர்.
10 கிலோ முதல் 40 கிலோ வரை எடை உள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6000 முதல் ரூ.39,000 வரை விலை போனது. பந்தய சேவல் ரூ.2500 முதல் ரூ.3500 வரை விற்கப்பட்டது.
ஆடி பண்டிகையையொட்டி ஆடு, கோழிகள் விற்பனை அதிகாலை முதலே களைகட்டியது. சந்தையில் நேற்று ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் காய்கறிகளின் விற்பனையும் சூடுபிடித்தது.
