×

கட்டண கழிப்பிடம் ரூ.13 லட்சத்திற்கு ஏலம்

ஓமலூர், ஜூலை 31: ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பல்வேறு இனங்களுக்கு ஓபன் டெண்டர் நடைபெற்றது. இதில், ஒப்பந்தம் எடுக்க பலரும் கலந்து கொண்டனர். ஆடு அடிக்கும் தொட்டி, பேருந்து நிலைய நவீன கழிப்பிடம், சைக்கிள் ஸ்டேண்ட், கடைகள், பேருந்து நிலைய வணிக வளாக கடைகள், செவ்வாய் சந்தை கடைகள், பேருந்து நிலைய ஐ.யு.டி.பி திட்ட கடைகள், காலி இடம் ஆகியவை ஏலம் கோரப்பட்டது. இதில், பலரும் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். அதன்படி ஆடு அடிக்கும் தொட்டி ரூ.5.46 லட்சத்திற்கும், நவீன கழிப்பிடம்-1 ரூ.9 லட்சத்திற்கும், நவீன கழிப்பிடம்-2, ரூ.4 லட்சத்திற்கும், கடைகள் ஏலம் என மொத்தம் ரூ.26 லட்சத்திற்கு ஏலம் போனது. ஏலம் முடிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வரியுடன் சேர்த்து முழு தொகையையும் கட்ட வேண்டும் என செயல் அலுவலர் சந்திரகுமார் தெரிவித்தார். இன்றைய ஏலத்தில் கலந்து கொண்ட பலரும், ஏல தொகையை பல மடங்கு உயர்த்தி ஏலம் எடுத்தனர். அதனால், அனைத்து கட்டணமும் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.

The post கட்டண கழிப்பிடம் ரூ.13 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Status Town Panchayat ,Dinakaran ,
× RELATED கார் மீது அரசு பஸ் மோதி விபத்து