×

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு

மயிலாடுதுறை: பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி டி.எஸ்.பி. சுந்தரேசன் குற்றம்சாட்டி இருந்தார். சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய திருச்சி மண்டல ஐஜிக்கு, தஞ்சை மண்டல டிஐஜி பரிந்துரை செய்திருந்தார். டி.எஸ்.பி. சுந்தரேசன் மீதான புகார் குறித்த அறிக்கை உள்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டது.அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்ததாக டி.எஸ்.பி. சுந்தரேசன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara Prohibition Enforcement Division D. S. B. ,sundaresan ,Mayiladudhara Liquidation Enforcement Division D. S. B. ,S. B. Sundaresan ,Trichy Mandala ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!