×

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (17ம்தேதி) வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது, திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DIMUKA DISTRICT SECRETARIES ,Chennai ,Chief Minister MLA ,K. Duraimurugan ,Stalin ,Dimuka General Secretary ,Duraimurugan ,Dimuka ,Mu. K. TIMUKA ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி