×

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தற்போது உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டும், பருவகால புன்செய் பயிரிடுவதற்கு வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாயில் நாளை முதல் நவம்பர் 13ம் தேதி வரை மொத்தம் 120 நாட்களுக்கு முதல் போக புன்செய் பயிர் சாகுபடிக்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் மொத்தம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட்டு, 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 76.23 மில்லியன் கன அடி வீதம் மொத்தம் 609.84 மில்லியன் கன அடி சுழற்சி முறையில் 8 தவணையாக சுமார் 8000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 8000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli Reservoir ,Krishnagiri ,Krishnagiri district ,Osur circle ,Bunsei ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!