விழாவில், வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா, துணை தலைவர்கள் டி.என்.முருகானந்தம், கீழானூர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், டி.செல்வம், அருள் பெத்தையா, காண்டீபன், பி.வி.தமிழ்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் சங்க நிர்வாக சக்தி சிவக்குமார் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. அதேபோன்று, தமிழ்நாடு ப்ரொபஷனல் காங்கிரஸ் பிரிவு சார்பில் மாநில நிர்வாகி ரகுநாத் மனோகர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
The post சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் சிலைக்கு காங்கிரசார் மரியாதை appeared first on Dinakaran.
