×

முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிநாடு பயணம்; 4 நாட்களுக்கு முதல்வர் பொறுப்பை ஏற்கும் பவன் கல்யாண்: அரசியல் வட்டாரங்கள் தகவல்

திருமலை: முதல்வர் சந்திரபாபுநாயுடு வெளிநாடு செல்ல உள்ளதால் 4 நாட்களுக்கு முதல்வர் பொறுப்பை பவன் கல்யாண் ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாணும் உள்ளனர்.இந்நிலையில் மாநிலத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிங்கப்பூர் செல்கிறார்.

இதுதொடர்பாக 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவருடன் அமைச்சர்கள் நாரா லோகேஷ், நாராயணா மற்றும் டி.ஜி.பரத் ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் முதல்வர் வெளிநாடு செல்வதால், நிர்வாக விவகாரங்கள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, 4 நாட்களுக்கு பொறுப்பு முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. பவன் கல்யாண் முதல்வராக பொறுப்பேற்பார் என்ற செய்தி ஜனசேனா கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிநாடு பயணம்; 4 நாட்களுக்கு முதல்வர் பொறுப்பை ஏற்கும் பவன் கல்யாண்: அரசியல் வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Bhavan Kalyan ,Chief Minister ,Thirumalai ,Chandrababunayud ,Telugu Desam Party ,AP ,Janasena party ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி